_*
*எண்ணும் எழுத்து திட்டத்தை ஆய்வு செய்திட...*
*இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மேலும் சிறப்பாக மாற்ற ஆலோசனை வழங்கிட...*
*காலை உணவு திட்டத்தை பார்வையிட...*
*பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை ஒழுங்கு படுத்திட....*
*மாவட்ட அளவில் புதிய அலுவலர்கள் நியமனம்.... தொகுப்பூதிய முறையில்....*
*அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் பெயர்கள்.*
*FELLOW*,மற்றும்
*JUNIOR FELLOW*
*15நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் புதிய ஆய்வு அலுவலர்கள்....*
*மாத ஊதியம்:*
*FELLOW பதவிக்கு - 45000/-*
*JUNIOR FELLOW பதவிக்கு - 32000/-*
*2018-19 ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஒரு கோரிக்கை வைத்தோம்.... அரசாணை 56 ஐ இரத்து செய்க என்று...*
*அந்த அரசாணைப்படி, அரசு அலுவலகங்களில் இனி பணி நியமனங்கள் தனியார் நிறுவனங்கள் மூலமாக நடைபெறும். அந்த நிறுவனங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்கிறது...*
*இப்ப பள்ளிக் கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மாவட்டத்திற்கு ஒரு FELLOW, 3 JUNIOR FELLOW என நியமனங்கள் முடிந்துவிட்டது.*
*விரைவில் FELLOW & J.FELLOWக்கள் பணியை துவங்க உள்ளார்களாம்...*