தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில்24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்துஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50சதவீதம் நேரடி நியமனம் மூலம்நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிகவேலைவாய்ப்பு ஏற்படும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்,அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசுஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்துஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரேஅவர்களைப் பற்றிய முழு விவரங்கள்அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழகஅரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டியபணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்டபணப்பயன்கள் குறித்து முன்கூட்டியேதிட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடுசெய்யப்படுகிறது.
அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பிஎனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு(சீனியாரிட்டி) மற்றும் கருணைஅடிப்படையிலும் பணி நியமனம்நடைபெறுகிறது.
இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில்அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும்ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர்ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர்,அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சிபணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏஅலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரிபேராசிரியர்கள் என அனைத்து வகைஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில்இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதானஒன்றாகும்.
பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீதகாலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும்,எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம்மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடிநியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல்இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிகவேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காகடிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள்நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும்மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்றுடிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)சி.பாலசுப்பிரமணியன் அண்மையில்அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி,குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏஅலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரிபேராசிரியர்கள் என அனைத்து வகைஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில்இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதானஒன்றாகும்.