Breaking News

டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு இருவகை பரிந்துரை பட்டியல்: கல்வித் துறையில் குழப்பம்


தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்.,க்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். இந்த முறை பின்பற்றப்பட்டால் தான் பொதுத் தேர்வுகளை கண்காணிக்க முடியும். ஆனால் சில ஆண்டுகளாக செப்டம்பரில் பதவி உயர்வு வழங்கப்படுவதால் தேர்வுகள் முடிந்து தேர்ச்சி பாதிப்பதாக சர்ச்சை எழுகிறது.
இதை தவிர்க்க பிப்ரவரிக்குள் டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு வெளியிட வேண்டும். தற்போது பிளஸ் 2 தேர்வு துவங்க உள்ள நிலையில் தற்போது 40க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு உத்தரவுப்படி டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வுக்கு பள்ளி துணை ஆய்வாளர் (டி.ஐ.,) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் வயது அடிப்படையில் சிலருக்கு விலக்கு அளித்து டி.ஐ., தேர்வு தேர்ச்சி பெறாதவர்களையும் பதவி உயர்வு 'பேனலில்' இணைத்து அனுப்பினர். பல மாவட்டங்களில் இவ்வாறு தேர்ச்சி பெற்றவர், பெறாதவர் என இரண்டு வகை பட்டியல் அனுப்பப்படுகின்றன. இதை பரிசீலிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றார்.

பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு


பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது. 

இதற்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூரில் நேற்று நடந்தது. அறை கண்காணிப்பாளர்களுக்கு புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. சிலருக்கு 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களில் பணி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பழநி, வேடசந்தூரில் ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதேநிலை மற்ற மாவட்டங்களிலும் உள்ளதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சலேத்ராஜா, ராமகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது: புதிய முறையில் 15 கி.மீ., தூரத்திற்குள் பணி வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறையை மீறி 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் தேர்வு பணியை புறக்கணிப்போம், என்றார்.

ஜாக்டோ - திட்டமிட்டபடி மார்ச் 8ம் தேதி ஆர்பாட்டம், பேரணி நடைபெறும்


80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்த 

நிதியமைச்சர் அருண் ஜேட்லி மோடி அரசு ஐம்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமும், அதற்காகஇந்தியா முழுவதும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகளை தேர்ந்தெடுத்து தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஏழை மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.மேலும் மத்திய கல்வித் துறையின் சார்பில் கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசத்தில் ஐ.ஐ.எம் அமைக்கப்படும்.அருணாச்சலப் பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளர்.

REGULARIZATION ORDER FOR DIRECT PG TEACHERS APPOINTED AFTER 2010


பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது


தமிழகத்தில் காலியாக உள்ள 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கல்ந்தாய்வு மார்ச்1ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியல் வரிசை எண்.685 வரை உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்
என பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்  சங்கத்தின் தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.

ஜேக்டோ - 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.03.2015 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சியில் மார்ச் 1 ம் தேதி நடைபெறுகிறது


பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை


“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது 
அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது: வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும்.


அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுத வேண்டும். விடைத்தாளில் வேறு எந்த குறியீடும் எழுத கூடாது என மாணவர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் விடைத்தாளை முழுமையாக சரிபார்த்த பின்பே மாணவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும், என்றார்.

பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என தேர்வு அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குக் கையேடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.

பிளஸ் 2 தேர்வுப் பணியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு அலுவலர்களாகவும், பத்தாம் வகுப்புத் தேர்வுப் பணியில் 1.20 லட்சம் ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர்.

தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவோருக்கான பல்வேறு அறிவுரைகள் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

அந்தந்த மைய முதன்மைக் கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த கூட்டத்தில் அறைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்க வேண்டும்.

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை


தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, 
tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. 

ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன. 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின், நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மீது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மெட்ரிக் பள்ளிகளில் போதுமான காற்றோட்டம், இடவசதி உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் தரவேண்டும்; பிரைமரி, நர்சரி பள்ளிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர்.

கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு- தேர்வுத் துறை


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுப் பணிகளுக்கான கையேடு வழங்கப்பட்டது.

மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது


திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் தனியார் பள்ளியின் மாணவரைக் கணடித்த உடல்கல்வி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து சம்பவத்தைக் கண்டித்து காலவரையின்றி மூடப்பட்ட பள்ளி வியாழக்கிழமை வழக்கம் போல் இயங்கியது. திருப்போரூரை அடுத்த நெல்லிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜ்குமார். கடந்த 19ந் தேதி பள்ளி வளாகத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டிவந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் அரவிந்த்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவனின் தந்தை ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளி வளாக்தில் ராஜ்குமாரை தாக்கியுள்ளனர்.

அனைத்து வசதிகள் செய்து கொடுத்தும் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைய என்னதான் காரணம்?

அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. ஒருகாலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகள் இருந்தன. இன்றைக்கு பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் ஏதோ கடமைக்காக வேலைக்கு வந்தோம். மாதம் பிறந்தால் சம்பளம் பெற்றுக் கொள்கிறோம் என்ற நினைப்புடன் தான் வேலைக்கு வருகின்றனர். அரசு கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வந்தும், ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதில்லை.

ஒருவன் எந்த ஒரு உயரிய பதவியை அடைந்திருந்தாலும் அவன் கண்முன் முதலில் தெரிவது ஆரம்ப கல்வியை போதித்த ஆசிரியர் தான். ஆனால் இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் கல்வி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு காரணம் சில பள்ளிகளில் மாணவர்களுக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை.

JACTO பொறுப்பாளர்கள் அறிக்கை

அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்

நிதி(ஊதியப் பரிவு)த்துறை - 6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம் என த.அ.உ.சட்டத்தின் வாயிலாக அரசு பதில்

SSA-அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: 
இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஆண்டு விழா நடத்த வேண்டும். மேலும், பள்ளி ஆண்டு விழாவின்போது, மாணவர்களுக்கு கலை தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும்.

'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'


வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. 
இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து, தேர்வுத்துறை, அவ்வப்போது சுற்றறிக்கை அனுப்புகிறது.
அதன்படி சமீபத்திய சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகளின்போது, முதல் இரண்டு பக்கங்களை பயன்படுத்தாமல்தவிர்க்க வேண்டும். விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும், தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வின்போது, 'ரப் வொர்க்' செய்வதற்கு, விடைத்தாளின்அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளின் வலது பக்க ஓர பகுதியை பயன்படுத்தக் கூடாது.

இயக்குனர்களிடம் கருத்து கேட்பு-பட்ஜெட்டில் என்னென்ன தேவை?

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம் சார்பில், கருத்துரு கேட்கப்படும். 

இந்த ஆண்டு கல்வித் துறைக்கு, பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் முக்கியமாக இடம் பெற வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது; இதற்காக, கருத்துக் கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமையிலான கூட்டத்தில்,இயக்குனர்கள் கண்ணப்பன், ராஜன், அறிவொளி, பிச்சை, பூஜா குல்கர்னி, முருகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துறை செயல்பாடுகளை கணினி மயமாக்க நிதி ஒதுக்கீடு; வகுப்பறைகளுக்கு உபகரணங்கள் வாங்குதல்; மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாடத்திட்டங்களை ஆய்வு செய்தல்; ஆய்வுப் பிரிவு உருவாக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளுக்கு, இயக்குனர்கள் கோரிக்கை விடுத்து, கருத்துரு அளித்துள்ளனர்

பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்



மார்ச் 1ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு; 2ல் பிளஸ் 2 தேர்வு; பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தீவிரம்


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 1ம் தேதி ஆங்கில விருப்ப பாடமும், 4ம் தேதி வரலாறு, 8ம் தேதி அரசியல் அறிவியல், 11 ம் தேதி வேதியியல், 13ம் தேதி விருப்ப பாடம், 20ம் தேதி கணிதம், 22ல் கம்ப்யூட்டர் சயின்ஸ், 26ல் பொருளாதாரம், 29ல் புவியியல், ஏப்ரல் 17ல் ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கின்றன.அதே போல், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி மொழித்தேர்வுகள், 3ல் கணிதம், 10ல் அறிவியல், 14ல் சமூக அறிவியல், 19ல் ஆட்டோ மொபைல் டெக்னாலஜி உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது.

மார்ச் 8 ம்தேதி ஆர்ப்பாட்டம் உறுதி!!



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு

தற்காலிக மதிப்பெண் சான்று 


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்: பள்ளிக்கல்வித்துறை செயலர்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா. சென்னையில் பிளஸ் 2 தேர்வு குறித்த பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் விடைத்தாள்நகல் உடனே கிடைக்க புதிய ஏற்பாடு. விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்திற்குள் விடைத்தாள் நகல் கிடைக்கும்.

ஜாக்டோ பொறுப்பாளர்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் முரண்பாடு

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் முதல்வருடனான சந்திப்புக்கு காத்திருந்த ஜாக்டோ பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் சுனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ அமைப்பில் 16 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டதாகவும், இறுதியில் ஜாக்டோ அமைப்பில் உள்ள முதல் 3 பேர் கொண்ட குழு முதல்வரை சந்திக்க அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த 3பேர் கொண்ட குழுவும் முதல்வரை சந்திப்பதற்கான அனுமதி (Appointment) பெறவில்லையெனவும்,

அனுமதி பெற்ற பின் வரவும் என அனைவரையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மாலை 4மணிக்கு ஜாக்டோ மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்.

பிளஸ் 2 விடைத்தாள் டாப்சீட் எரிந்தது நெல்லை கல்வி அதிகாரி திடீர் மாற்றம்: பள்ளி கல்வித்துறை அதிரடி


பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லையில் விடைத்தாள் ‘டாப் சீட்‘ எரிந்து நாசமானதால் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே  உள்ள நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறை எண்.3ல் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களின் ‘டாப் சீட்கள்‘ கடந்த 21ம் தேதி  இரவு எரிந்து நாசமானது. இந்த ‘டாப் சீட்கள்’ மெயின் சீட்டுடன் இணைத்து தைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில்  பதிவு எண்ணை எழுத தேவையில்லை.

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை


என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும்விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம்பரிசீலித்து வருகிறது.

539 என்ஜினீயரிங் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக்கழகக கட்டுப்பாட்டில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்பட 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுமுறையில் சீர்திருத்தம், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சீர்திருத்தம் ஆகியவற்றை கொண்டுவர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை பல்கலைக்கழக அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள்


வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

இம்முடிவுகள் வெளியான 10 தினங்களுக்குள்(5.3.2015 தேதிக்குள்) மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கானவிண்ணப்பம் பல்கலைக்கழக இணையதளத் தின் மூலம்பதிவிறக்கம் செய்யப்பட்டு மறுமதிப்பீட்டுக்கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் பதிவாளர்,அழகப்பாபல்கலைக்கழகம் என்ற பெயரில் வரைவோலை செலுத்தி தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் கா. உதய சூரியன் தெரிவித்துள்ளார்

உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு இதுவரை 

‘அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்’ என்ற கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார். அதில் கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். 

இந்த அரசாணை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு


தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் 
பணிக்கான 2,881 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 9.5.2013ல் டிஆர்பி வெளியிட்டது.
இதற்கான தேர்வில் 91 கட் ஆப் மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோருக்கான பிரிவில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கான ஒதுக்கீட்டில் பட்டதாரி ஆசிரியர் பணி கோரினேன். ஆனால் தமிழ் வழி கல்வி ஒதுக்கீட்டிற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி


முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த முருகேஸ்வரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு கூறியுள்ளார்.

மனுவில், பொருளாதார பாடத்தில் பி.ஏ., எம்.ஏ. மற்றும் பி.எட். பட்ட வகுப்புகளை தமிழ்வழிக் கல்வியில் படித்து தேர்ச்சி பெற்றேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு 2013 ஜூலை 21 இல் நடைபெற்றது. அதில் 91 மதிப்பெண்கள் பெற்றேன். அதன்பிறகு 2013 அக்.23 இல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன் பிறகு வெளியிடப்பட்ட தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. நான் தமிழ் வழியில் படிக்கவில்லை எனக்கூறி எனக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. தமிழ்வழிக் கல்வியில் தான் படித்துள்ளேன். எனக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்

' மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர். தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ௨௦௧௪ ஆக., ௩௧ன் படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, 'நிர்வாக மாறுதல்' என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்' என்றார் Copy and WIN : http://bit.ly/copynwin

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

15 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் 8ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டு நடவடிக்கை குழுவின் நிர்வாகி ரங்கராஜன், அகவிலைப்படி 100 சதவீதத்தை கடந்து விட்டதால் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 6வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்


சிங்கம்புணரி:இந்த கல்வி ஆண்டு முழுவதும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் எஸ்.புதுார் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2,பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாராப்பூர், நெடுவயல், கே.புதுப்பட்டி,கிழவயல்,சுற்றுக் கிராமங்களைச் 500 க்கும்மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு 65 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவிருக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலிருந்து ஆங்கிலம், கணிதத்திற்கு ஆசிரியர்களே இல்லை. மற்ற வகுப்பு ஆசிரியர்கள் இவர்களுக்கு பாடம் நடத்தி பொதுத்தேர்விற்கு தயார் படுத்தி வருகின்றனர். முற்றிலும் கிராமப்பகுதி மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஆசிரியர் இன்றி பொது தேர்வு எழுதும் தங்கள் குழந்தைகள் எதிர்காலம் பற்றி பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, ஆசிரியர்கள் காலியிடம் பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன், என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தெரிவித்ததாவது: மலைக்கிராமமாக இருப்பதால் ஆசிரியர்கள் யாரும் பணி செய்ய தயங்குகின்றனர் . எனினும் மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிகூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.


அப்போது குறுக்கிட்டு அமைச்சர் வேலுமணி கூறியது:

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அது போல, சென்னை பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வரும்

செய்திகளும் தவறானவை. சென்னைப் பள்ளிகள் ஒரு நாளும் தனியாரிடம் ஒப்படைக்கப் படாது. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலத் திறனை

மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை ,தொடரும் வன்முறைஃ மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

பள்ளி மாணவனை கண்டித்த உடற்கல்வி ஆசிரியரை, தந்தை, உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால், அவரது காது கிழிந்தது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து சக ஆசிரியர்கள், காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.


இச்சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கண்டித்து அடித்தார். இதுபற்றி, அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, தொழிலதிபரான அவரது தந்தை ரவுடி கும்பலுடன் பள்ளியில் புகுந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார். மேலும் பள்ளியும் சூறையாடப்பட்டது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கிய புள்ளி என்பதால் மாணவனின் தந்தை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆசிரியர்களும், பள்ளிகளின் நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்

பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்குஉயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: 

தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த ஆசிரியர் பயிற்சியை 1 ஆண்டில் இருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்க தேசிய கல்வியியல் கல்வி கவுன்சில்(என்சிடிஇ) அறிவித்தது. தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கூட்டமைப்பு மத்திய அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மேலும், 2016-17ம் கல்வியாண்டில், இந்த 2 ஆண்டு படிப்பை தொடங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இதற்கான கால அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல்மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பிளஸ் 2 தேர்வு, வரும் மார்ச் 5ம் தேதி 
துவங்குகிறது. 8 லட்சத்துக்கும்மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுதுகின்றனர்.

விடைத்தாளில் மாற்றம்:

கடந்த பொதுத்தேர்வை விட இந்த ஆண்டு தேர்வில், விடைத்தாளில் சில மாற்றங்களை,தேர்வுத் துறை செய்துள்ளது. அதன்படி, மொழிப்பாட தேர்வுகளுக்கு கோடிட்ட விடைத்தாள்கள், வரைபடம் உள்ளிட்டவற்றை, விடைத்தாளுடன் சேர்த்து தைத்து வழங்குதல் ஆகியவை, புதிதாக அமல்படுத்தப்பட உள்ளன. தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வுக்கு, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன், தேர்வரின் பெயர், பதிவெண், தேர்வு மைய எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வானவில் ஔவையார் எழுத்துருவை NHMல்…நிறுவி தட்டச்சு செய்வது எப்படி?

தட்டச்சு தெரியாவிட்டாலும் தட்டச்சு செய்யலாம்! இனி வானவில் எழுத்துருவை!
நமது நண்பர் ஒருவரிடம் வானவில் ஔவையார் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட அலுவலக ரீதியிலான கோப்பு இருந்தது. அதில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்த்து. ஆனால் அவரது கணினியில் வானவில் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கவில்லை. எழுத்துரு மட்டும் கோப்புடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கைகொடுத்த்து NHM ரைட்டர்.  எவ்வாறு என்று இங்கே நாம் பார்க்கலாம்.
தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

34 மாணவர்கள் 5 வகுப்புகள்- ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை




வால்பாறை: வால்பாறை அருகே, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், 34 மாணவர்களுக்கு, ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது, சிறுகுன்றா மேல்பிரட்டு. இங்குள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், 34 மாணவர்கள் படித்து வருகின்றனர். வனப்பகுதியில், அமைந்துள்ள இந்தப்பள்ளிக்கு, பகல் நேரத்தில் விலங்குகள் உலா வரும். இதனால், பள்ளியை சுற்றிலும், வேலி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது தலைமை ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவரே, ஐந்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்துகிறார். அவர், அலுவலகப் பணிக்காக வெளியில் சென்றால், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியிடம் கேட்டபோது, "இதுகுறித்து ஆய்வு நடத்திய பின்னர், இந்தப் பள்ளிக்கு மாற்றுப்பணி அடிப்படையில், ஆசிரியர்ளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.