பள்ளிக்கல்வி இயக்குநரக இணையதளம் http://dse.tnschools.gov.in என்ற முகவரியில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இயக்குனரக இணையதளத்தில் இருந்து 32 மாவட்ட முதன்மை
கல்வி அலுவலக இணையதளம் மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இணைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக முதன்மை கல்வி அலுவலக இணையதளம் செல்ல http://dse.tnschools.gov.in/districtname என்ற URL பயன்படுத்தலாம்.
District name டைப் செய்யும் போது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக
இருக்க வேண்டும். நேரடியாக பள்ளிகளின் இணையதளம் செல்ல http://dse.tnschools.gov.in/udisecode என்ற URL பயன்படுத்தலாம். இங்கு
udisecode என்பது பள்ளியின் 11 இலக்க Udise எண் ஆகும். இணையதளத்தில் தெரிய
வேண்டிய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை Login செய்து
பதிவெற்றிக்கொள்ளலாம். இதேபோன்ற அமைப்பு தொடக்கக்கல்வி இயக்குரகத்திற்கும்
கொடுக்கப்பட்டுள்ளது. http://dee.tnschools.gov.in என்ற URL பயன்படுத்தலாம்.