IMPORTENT LINKS

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை



மத்திய அரசின் கீழ் செயல்படும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஒ.என்.ஜி.சி.,) வழங்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், இன்ஜினியரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., மாஸ்டர் இன் ஜியோலஜி அல்லது ஜியோபிசிக்ஸ் போன்ற ஏதேனும் ஒரு துறையில் முதலாம் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூபாய் 4 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூபாய் 48 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24
விபரங்களுக்கு: www.ongcindia.com