Breaking News
வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை
சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி-சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
Labels:
பத்திரிக்கை செய்தி