IMPORTENT LINKS

மயில்சாமி அண்ணாதுரை உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி


                        புது தில்லி : மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற வண்ணமயமான விழாவில், திருபாய் அம்பானியின் மனைவி கோகிலாபென் அம்பானி, தனது கணவரின் சார்பில் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

இவர்களைத் தவிர, மத்திய முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், பிரபல ஹிந்தி நடிகர் அனுபம் கெர், பேட்மிண்டன் வீராங்கனை சானியா நெவால் உள்ளிட்ட 8 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்பட 43 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கெளரவித்தார்.