IMPORTENT LINKS

கடலூருக்கும் உதவி தேவை

கடலூர்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் கடலூரில் கனமழை பெய்தது. இதில் இரு மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் வெள்ளம்வந்தபோது, மக்கள் மாடிக்கு சென்று தஞ்சமடைந்தனர். ஆனால் கடலூரில் குடிசைக்கு மேல் வெள்ளம் போகிறது. மேலும் நிவாரண பணிகள் குறித்து அங்கு கண்டு கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. கடலூரிலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது