IMPORTENT LINKS

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

இன்றைய 'ஒரு வார்த்தை ஒரு இலட்சம்' விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய கோவை,மூலத்துறை ஊ.ஓ.நடுநிலைப் பள்ளி,7ம் வகுப்பு மாணவர்கள் கோகுல், சுனில் குமார் பாராட்ட வார்த்தைகள் இல்லை. பதின்ம பள்ளிகளுக்கு மத்தியில், தங்களைவிட மூத்த மாணவர்கள் இடையில் மிகச் சிறப்பாக முதலிடம் பெற்று அரசு பள்ளிகளுக்கு பெருமை தேடித் தந்தனர்.பயிற்றுவித்த ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும் பல. பல சாதனைகள் படைத்து வரும் மூலத்துறை பள்ளி வாழ்க! வளர்க!தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் வளர்ந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.