IMPORTENT LINKS

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு; இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்ட பொது நல வழக்கு(வழக்கு எண்.11987 / 2015) நாளை நீதிமன்ற எண்.9ல் விசாரணைக்கு வரவுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த தொகை வழங்கவும், ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை PFRDAவிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.