IMPORTENT LINKS

வரும் 19ம் தேதி வெளியாகிறது 'டான்செட்' முடிவு

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் இன்ஜி., கல்லூரிகள்; அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., போன்ற மேற்படிப்புகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.
இதற்கு, தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வை, அண்ணா பல்கலை கழகம், மே, 16, 17ம் தேதிகளில், தமிழகம் முழுவதும் நடத்தியது. இத்தேர்வை, 44 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவு, வரும் 19ம் தேதி வெளியாகிறது