IMPORTENT LINKS

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை


ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலா, மகன் அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் பணிநியமனத்தில் சவுதாலா ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஓம்பிரகாஷ் சவுதாலா உள்பட 53 பேருக்கு கீழ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. சவுதாலாவின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.